T24 Tamil Media
Uncategorized

காணமல் போன விறகு வெட்ட சென்ற 25 வயது யுவதி

நேற்றையதினம் விறகு வெட்டுவதற்காக தாயுடன் வனப்பகுதிக்கு சென்ற 25 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை தேடி இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனது தாயுடன் நுவரெலியா டன்சினன் வனப்பகுதிக்கு விறகு வெட்டுவதற்கு சென்ற போதே குறித்த யுவதி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை 9.30 மணி அளவில் டன்சினன் தோட்டத்திற்கு மேலே அமைந்துள்ள டன்சினன் வனப்பகுதிக்கு தனது மகளுடன் சென்றதாகவும், வனப்பகுதியின் உச்சிற்கு மகள் சென்ற நிலையில் மீண்டும் வரவில்லை என அவரது தாய் மனோமனி (58) தெரிவித்தார்.

இந்தநிலையில், பிற்பகல் 2 மணி வரையில் மகள் திரும்பாததால் சம்பவம் குறித்த அயலவர்களுக்கு தெரியப்படுத்திய பின்னர் நேற்று மாலை தொடக்கம் வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவரது தாயார் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது!

T24 News Desk 4

ஹதபிமவினால் நிறுவப்பட்ட உணவகம் மூடும் அபாயம்.

T24 News Desk 4

ஹட்டன் – மல்லியப்பு சந்தியில் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுப்பு!

T24 News Desk 4

ஸ்ரீலங்காவுக்கு ஐக்கிய அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் தோன்றியுள்ள புதிய பிரச்சனை

T24 News Desk 4

ஜனாதிபதிக்கு அரசாங்க அதிபர் ஊடாக மகஜர் கையளிப்பு.

T24 News Desk 1

வேகக் கட்டுப்பாடினை இழந்து மயிரிழையில் உயிர்தப்பிய இராஜாங்க அமைச்சர்!

T24 News Desk 4

வெளியாகியது ஆவிகளின் துலங்கல்கள்!! நாம் சந்திக்கும் அமானுஷ்யங்களுக்கும் மர்மங்களுக்கும் இதுதான் காரணமா?

T24 News Desk 4

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச அளவிலான ஆதரவு விலை!

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more