சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணிக்காக வெள்ளை ஜேர்சி அணிந்து விளையாடினால் அதுவே தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பெருமைக்குரிய தருணமாக அமையும் என தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது உபாதைக்குள்ளான உமேஷ் யாதவ்வுக்குப் பதிலாக கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய குழாத்தில் நடராஜன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.