இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
அவர் ஆரியிடம் கோபமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அனால் போட்டி என்று வந்துவிட்டால் அனிதா புலியாக மாறிவிடுவார். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறியது அவரது ரசிகர்களை சற்று அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
100 கு மேலாக நாட்கள் பிரிந்திருந்த அவரது கணவர் பிரபா என்ன நடந்தாலும் தனது மனைவிக்கு ஆதரவாக பதிவுகள் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து அனிதா வெளியேறியதை பற்றி அவரது கணவர் பிரபாகரன் தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். அதில் பிக்பாஸில் அனிதாவுக்குகொடுத்த ஸ்மைலி பொம்மை ஒன்றை வெளியிட்டு, அதன் கீழே “என்னுடைய அருமையான தேவசேனா திரும்பி வந்துவிட்டாள்” என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.