வவுனியா மாவட்டத்தில் புளியங்குளம் பகுதியில் ஒன்பது இலட்சம் ரூபாய் பணம் நேற்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக புளியங்குளம் காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்காக சென்ற நபரொருவை புளியங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியில் வழிமறித்த குழுவினர் அவரைஅச்சுறுத்தி அவரிடமிருந்த 9 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்க பட நபரால் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான விசாரணையை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.