யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்
வட மாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி காண்டீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த 200 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தங்கியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.