நேற்றைய தினம் அடையாலங்க்காணப்பட்ட 141 கொவிட் தொற்றாளர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கொவிட் 19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் 25 பேரும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 12 பேரும்.குருநாகல் மாவட்டத்திலிருந்து 25 பேரும், முல்லைத்தீவு மற்றும் காலி மாவட்டங்களிலிருந்து தலா 2 பேர் வீதமும் நேற்றைய தினம் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் பதுளை மாவட்டத்திலிருந்து 4 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 6 பேரும், மொனராகலை மற்றும் கேகாலை மாவட்டங்களிலிருந்து தலா 3 பேர் வீதமும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களுள் அடங்குவர்.
மேலும் ட்டக்களப்பு, வவுனியா, அம்பாந்தோட்டை, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கண்டி மாவட்டங்களிலிருந்து தலா இருவர் வீதமும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 19 பேரும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களுள் அடங்குவர் என Covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.