திருகோணமலை மாவட்டத்தில் குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட நடுஊற்று கிராம சேவகர் பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி படுத்த படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்..அஜித் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேற்கொள்ளப்படட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின்படி இந்த ஆறுபேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .
மேலும் வெளிநாடு செல்வதற்காக கிண்ணியா நடு ஊற்று கிராமசேவகர் பிரிவில் உள்ள நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்படட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி படுத்தப்பட்டது .
இந்தநிலையில் அவருடன் தொடர்புடையவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 5 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அத்துடன் இந்த குடும்பத்தைச் சேர்ந்த மகாமாறு அலிகார் மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பிரிவில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு இன்று (18) தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்த அவர், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இலங்கையில் பெஹலியகொட மீன் சந்தையில் இருந்து ஆரம்பித்த, 2 வது கொரோனா அலைக்குப் பின்னர் இந்த பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.