நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை தற்போது 1789 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 1789 பேரில் இதுவரை 11 பேர் மாத்திரம் உயிரிழந்துள்ளதுள்ளதுடன், மேலும் 939 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்றைய நாளில் இதுவரை மட்டும் 40 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் 839 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.