நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 அச்ச நிலைமை காரணத்தினால் தற்பொழுது யாழ் மாவதிடத்திலும் கொவிட் 19 நிலைமை அதிகரித்து புதிய கொத்தணி உருவாகும் நிலை காணப்படுகின்றது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அச்சுவேலி சந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொவிட் 19 நிலைமை யாழ் மாவட்டத்தில் தற்பொழுது குறைவடைந்து காணப்பட்டது .
இதேவேளை நேற்று முன்தினம் மேற்கொள்ளப்படட பரிசோதனையில் தொற்றாளர்களின் எணிக்கை அதிகரித்து காணப்பட்டது
அத்துடன் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்படட பரிசோதனையில் 200 ஆக காணப்பட்ட தொற்று நேற்றைய தினத்தில் மாத்திரம் 206 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது