T24 Tamil Media
நேர்கொண்ட பார்வை

புலியுடன் உறங்கி பாம்பினால் உயிர்விட்ட பேரழகி.

கிளியோபாட்ரா எகிப்தை ஆண்டிருந்தாலும் அவர் பெயர் உலகம் முழுவதும் பிரபலமானது. அதற்கு அவரின் அழகு ஒரு காரணமாக இருந்தாலும் அதையும் தாண்டி பல காரணங்கள் உள்ளது.

எண்ணற்ற மர்மங்கள் நிறைந்த கிளியோபாட்ராவின் வாழ்க்கையில் இறுதியில் அவரின் மரணமும் மர்மமாகவே மாறியது துரதிர்ஷ்டவசமானது.

இந்த பதிவில் கிளியோபாட்ரா பற்றிய சில மர்மங்களைப் பற்றி தெரிந்து கொள்ளாலாம்.

கிளியோபாட்ரா தனது இரண்டு சகோதரர்களை மணந்தார். தனது 18 வது வயதில் அரியணை ஏறிய கிளியோபாட்ரா அதற்காக தன்னை விட 10 வயது இளைய சகோதரனான டோலமி VIII ஐ மணந்தார்.

தனது வம்ச இரத்தத்தை தூய்மையாக வைத்திருக்க அவர்களது குடும்பத்தினர் குடும்பத்திற்குள் திருமணம் செய்து கொள்ள முயன்றனர்.

இதைச் செய்வது மரபணு கோளாறுகளை ஏற்படுத்துகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. தனது முதல் கணவர் இறந்த பிறகு தன்னுடைய மற்றொரு சகோதரரை மணந்தார். ஆனால் அவர்கள் இருவரையும் கிளியோபாட்ராதான் கொலை செய்தார் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

கிளியோபாட்ரா ஜூலியஸ் சீசர் மற்றும் மார்க் ஆன்டனியுடன் காதல் இருந்தது. இந்த உறவு அரசியல் காரணங்களுக்காக என்று கூறப்பட்டாலும் அதையும் தாண்டி அவர்களுக்குள் உறவு இருந்தது.

ஜூலியஸ் சீசர் கிளியோபாட்ராவால் செய்யப்பட்ட ஒரு சிலையை தன்னுடனேயே வைத்திருந்தார். ஜூலியஸ் சீசர் கிளியோபாட்ராவை காதலித்து, ரோமில் உள்ள வீனஸ் கோவிலில் கிளியோபாட்ராவால் செய்யப்பட்ட சிலையை வைத்திருந்தார்.

குழந்தைகள் சகோதரர்கள் மூலம் கிளியோபாட்ராவிற்கு குழந்தைகள் இல்லை, ஆனால் ஜூலியஸ் சீசர் மூலம் சீசரியன் என்ற மகன் இருந்தார், மேலும் அவளுக்கு அலெக்ஸாண்டர் ஹீலியோஸ், கிளியோபாட்ரா செலீன், மற்றும் டோலமி பிலடெல்பஸ் ஆகிய மூன்று குழந்தைகள் மார்க் ஆண்டனி மூலம் பிறந்தனர்.

சகோதரர்கள் மூலம் கிளியோபாட்ராவிற்கு குழந்தைகள் இல்லை, ஆனால் ஜூலியஸ் சீசர் மூலம் சீசரியன் என்ற மகன் இருந்தார், மேலும் அவளுக்கு அலெக்ஸாண்டர் ஹீலியோஸ், கிளியோபாட்ரா செலீன், மற்றும் டோலமி பிலடெல்பஸ் ஆகிய மூன்று குழந்தைகள் மார்க் ஆண்டனி மூலம் பிறந்தனர்.

வரலாற்றாசிரியர்களிடையே மிகவும் பிரபலமான விவாதங்களில் ஒன்று கிளியோபாட்ராவின் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மமாகும். கிமு 30 இல் கிளியோபாட்ரா தனது 39 வயதில் இறந்தார், ஆனால் அவரது மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணங்கள் குறித்து வெவ்வேறு கதைகள் காணப்படுகின்றன. பொதுவாக அவர் ஆஸ்ப் என்று அழைக்கப்படும் கொடிய பாம்பு கடித்ததால் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Related posts

ஜே.. ஜே… என களைகட்டும் தேர்தல்.

T24 News Desk 1

வீட்டை விட்டு வெளியேறுமா தமிழினம்..?

T24 News Desk 1

வீட்டிற்குள் முடங்காது துணிந்து வாக்களிப்பீர்.

T24 News Desk 1

வியாபாராமாகும் தமிழர் அரசியல்.

T24 News Desk 1

வியாபாரமாகும் அரசியல்.

T24 News Desk 1

வாழ்க்கையை வாழ்ந்திடுவோம்.

T24 News Desk 1

வாழ்க்கை வாழ்வதற்கே.

T24 News Desk 1

வாழ்க்கை எனும் விளையாட்டு.

T24 News Desk 1

வாழ்க்கை எனும் கொண்டாட்டம்.

T24 News Desk 1

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more