T24 Tamil Media
நேர்கொண்ட பார்வை

துணிந்து வாழ்க்கையை வெல்வோம்.

எம்மில் பலர் எடுத்ததற்கெல்லாம் பயம் கொண்டவர்களாய் இருப்போம்.

பெற்றோருக்கு பயம், ஆசிரியர்களிற்கு பயம், அதிபரிற்கு பயம், முதலாளிக்கு பயம், அதிகாரிக்கு பயம் என நாங்கள் பல வித பயங்களிற்கு உள்ளாகித்தான் எம் வாழ்வை முன்னகர்த்தி வருகின்றோம்.

உண்மையில் நாம் பயப்படும் வரை எமது வாழ்வில் முன்னேற்றத்தை காணமுடியாது என்பதுடன், சந்தோசமான வாழ்வையும் நாம் வாழ முடியாது என்பது யதார்த்தம்.

எதனையும் நம்பி எமது வாழ்வு இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
கடவுள் தந்த வாழ்வில் எமக்கு தரப்பட்டவை யாவும் ஏதோ காரணத்திற்காக தரப்பட்டவை, அவை மீண்டும் கடவுளால் எடுக்கப்படும் போது ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் எடுக்கப்படுகின்றதை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எவரும் இல்லாமல் போவதாலோ, எதுவும் எம் வாழ்வில் இருந்து இழப்பதாலோ எமது வாழ்வு சரிந்துவிடாது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நாம் விரும்பியதை அடைய துணிவு கொள்ள வேண்டும், அது கல்வி, தொழில், காதல் இவற்றில் எதுவாயினும் நாம் விரும்பியதை அடைய துணிவு கொள்ள வேண்டும்.

அதனைத்தான் ‘மனதில் உறுதி வேண்டும்’ என எடுத்துரைத்தார் மஹாகவி பாரதியார்.
இதனை உணர்ந்து ஏற்கனவே வீழ்ந்து போயுள்ள தமிழினம் மனதில் உறுதிகொண்டு எதற்கும் அஞ்சாது வாழ்வை வெற்றிகொள்வோம்.

அதற்கு எமது மனதிலுள்ள அச்சம் என்ற சிறையை உடைத்து துணிவு எனும் பாதையில் பயணிக்க புறப்படுவோம்.

– பிரதம ஆசிரியர் –

Related posts

ஜே.. ஜே… என களைகட்டும் தேர்தல்.

T24 News Desk 1

வீட்டை விட்டு வெளியேறுமா தமிழினம்..?

T24 News Desk 1

வீட்டிற்குள் முடங்காது துணிந்து வாக்களிப்பீர்.

T24 News Desk 1

வியாபாராமாகும் தமிழர் அரசியல்.

T24 News Desk 1

வியாபாரமாகும் அரசியல்.

T24 News Desk 1

வாழ்க்கையை வாழ்ந்திடுவோம்.

T24 News Desk 1

வாழ்க்கை வாழ்வதற்கே.

T24 News Desk 1

வாழ்க்கை எனும் விளையாட்டு.

T24 News Desk 1

வாழ்க்கை எனும் கொண்டாட்டம்.

T24 News Desk 1

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more