T24 Tamil Media
உலகம்

ஹூவாவி நிறுவனத்திற்கு தடை விதித்தது பிரிட்டன்!

ஹூவாவி நிறுவனத்தின் 5ஆம் தலை முறை இணையச் சேவையை இதுவரை காலமும் பெற்றுவந்த பிரிட்டன் ஹுவாவி நிறுவனத்திற்கு தடை விதித்துள்ளது.

ஹுவாவி நிறுவனம் மீது தடை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அண்மைய நாட்களில் தெரிவித்திருந்த பிரிட்டன் தற்போது அந்த நிறுவனத்துக்கு தடை விதித்துள்ளது.

மேலும் 2027 ம் ஆண்டுக்குள் ஹுவாவி நிறுவனத்தின் 5ஆம் தலைமுறைத் தொழில்நுட்ப சாதனங்கள் பிரிட்டனில் இருந்து முழுமையாக அகற்றப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதற்கு ஏற்றால்போல் இந்த ஆண்டின் டிசம்பர் மாத இறுதிக்குப் பிறகு ஹூவாவி நிறுவனத்திடமிருந்து புதிதாக 5ஆம் தலைமுறைத் தொழில்நுட்ப சாதனங்களை வாங்குவதற்குத் தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த பன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனமான ஹவாவே அமெ ரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு 5ஆம் தலை முறை இணையத் தொழில்நுட்பத்தை வழங்கி வந்தது. இந்தச் சூழலில் அமெரிக்கா – சீனா இடையே வர்த்தகப் போரும் அதையொட்டிய முறுகல்கள் தொடர்ந்து சீனாவின் ஹூவாவி நிறுவனம் அமெரிக்கப் பயனாளர்களின் தகவல்களைத் திருடிச் சீனாவுக்கு வழங்கி வருவதாகவும் இதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறி ஹூவாவி நிறுவனத்தின் தொலைபேசிகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது.

இதைத்தொடர்ந்தே ஹூவாவி நிறுவனத்துக்குப் பிரிட்டனும் தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதி ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கும் கொரோனா தொற்று!

T24 News Desk 4

ஹொங்கொங்கில் மேலும் 52 கொரோனா தொற்றாளர்கள் உறுதி

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹாங்காங்கில் 50 ஜனநாயகவாதிகள் கைது!

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஸ்வீடன் இளவரசர்- இளவரசிக்கு கொரோனா! அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவுக்கு பஸில் ராஜபக்ஸ செய்த துரோகம் – கொதித்தெழுந்த சிங்கள தரப்பு

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more