T24 Tamil Media
உலகம்

மூன்றடுக்கு ஊரடங்கு! ஒரே நாளில் அதிகரித்த மரணங்கள்.

பிரித்தானியாவில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிகிச்சை பலனின்றி நூறுக்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் பிரதமர் போரிஸ் தலைமையிலான அரசு, கொரோனா பரவலை எதிர்கொள்ள மூன்றடுக்கு ஊரடங்கை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,234 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.

மட்டுமின்றி கடந்த நான்கு மாதங்களில் முதன்முறையாக 143 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.கடைசியாக பிரித்தானியாவில் ஒரே நாளில் 100-கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் மரணமடைந்தது ஜூன் 10 ஆம் திகதி என பதிவாகியிருந்தது.மட்டுமின்றி கொரோனா உறுதி செய்யப்பட்ட 28 நாட்களில் 111 பேர் மரணமடைந்த சம்பவமும் பிரித்தானியாவில் நடந்தேறியது.

இதனிடையே, கொரோனா பாதித்து இறந்தவர்கள் என தனியாக ஒரு 58,500 பேர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது.

இவர்களின் இறப்பு சான்றில், கொரோனாவால் இறந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.திங்களன்று வெளியிடப்பட்ட புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய மூன்றடுக்கு ஊரடங்கு முறையால் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்றே பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஊரடங்கால் கொரோனா பரவல் கட்டுக்குள் வராது என முரணான அறிக்கை ஒன்றை உலக சுகாதார அமைப்பின் முக்கிய நிர்வாகி ஒருவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதி ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கும் கொரோனா தொற்று!

T24 News Desk 4

ஹொங்கொங்கில் மேலும் 52 கொரோனா தொற்றாளர்கள் உறுதி

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹூவாவி நிறுவனத்திற்கு தடை விதித்தது பிரிட்டன்!

T24 News Desk 3

ஹாங்காங்கில் 50 ஜனநாயகவாதிகள் கைது!

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஸ்வீடன் இளவரசர்- இளவரசிக்கு கொரோனா! அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவுக்கு பஸில் ராஜபக்ஸ செய்த துரோகம் – கொதித்தெழுந்த சிங்கள தரப்பு

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more