வன்முறையை தூண்டும் விதமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முகநூலில் இட்ட பதிவு குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததற்காக முகநூல் நிர்வாகத்தினர் மீது அதன் முன்னாள் ஊழியர்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முகநூல் நிறுவனர் மார்க்ஸக் கர்பெர்கைச் சாடி அவருக்குக் கடிதம் ஒன்றையும் அவர்கள் எழுதியுள்ளனர். இது குறித்து அமெரிக்கா விலிருந்து வெளிவருகின்ற நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். பொலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தும் என்கிற ரீதியில் எச்சரிக்கை விடுத்து டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவு வன்முறையைத் தூண்டுவதாகக் குறிப்பிட்டு பொதுநல அறிவிப்பு ஒன்றை டுவிட்டர் வெளியிட்டது.
அதே பதிவு முகநூலிலும் பகிரப்பட்டது. ஆனால் இது முகநூல்: விதிகள் எதையும் மீறவில்லை என்று அதன் நிறுவனர் ஸக்கர்பெர்க் கூறினார்.
அதே வேளையில் இப்படியான மோசமான பதிவு களைக் கையாளும் விதத்தை மாற்றுவதாகவும் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாகவே தற்போது முன்னாள் ஊழியர்கள் முகநூல் நிர்வாகத்துக்குத் தமது கண்டனத்தைத் வெளிப்படுத்தியுள்ளார்.