கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடைந்து வரும் நிலையில் ரஷ்யாவின் மொஸ்கோ நகரம் முடக்கச்செயற்பாடுகளை தளர்த்தியுள்ளது.
இதேவேளை குறுகிய தூர நடைப்பயிற்சி மற்றும் வரையறுக்கப்பட்ட உடற்பயிற்சிகள் 9 வாரங்களுக்கு பின்னர் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
இதனைத்தொடர்ந்து முடக்கச்செயற்பாடுகளை தளர்த்துவது சிறந்தது அல்ல என்று ரஷ்ய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.