சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 70.80 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் 18 ஆயிரத்து 375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.91 லட்சத்தைக் கடந்துள்ளது.
பிரேசிலில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 500-ஐ நெருங்க உள்ளது.
மேலும், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.