T24 Tamil Media
உலகம்

தனி விமானத்தில் ஜேர்மனிக்கு வந்த குடும்பம்! விசாரணையில் பகீர் சம்பவம்.

தூதரக அதிகாரியின் குடும்பம் என்ற போர்வையில் தனி விமானத்தில் ஜேர்மனிக்கு வந்த நால்வரிடம் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜேர்மனியின் மியூனிச் விமான நிலையத்தில் அமைந்துள்ள தனி விமானங்கள் தரையிறங்கும் பகுதியில் வெள்ளிக்கிழமை ஈராக்கை சேர்ந்த நால்வர் குடும்பம் ஒன்று குட்டி விமானம் ஒன்றில் தரையிறங்கினர்.

குறித்த குடும்பமானது துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து டொமினிகா செல்லும் வழியில் மியூனிச் நகரில் தரையிறங்கியுள்ளனர்.

அவர்களிடம் இருந்த ஆவணத்தில் அவர்கள் கரீபியன் மாநிலமான செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸின் தூதரக அதிகாரி என குறிப்பிடப்பட்டிருந்தது.

பொதுவாக தூதரக அதிகாரிகள் தங்கள் தாய் மொழியுடன் சரளமாக ஆங்கிலம் பேசுபவர்களாக இருப்பார்கள்.

ஆனால் இந்த குடும்பமானது அவர்களின் தாய் மொழியைத் தவிர அவர்களால் ஆங்கிலம் பேச திணறியுள்ளனர்.

இதில் சந்தேகமடைந்த பெடரல் பொலிசார், அவர்களை தனித்தனியாக விசாரித்துள்ளனர்.

அப்போது அவர்களின் 12 வயது மகன், தமக்கு தெரிந்த ஆங்கிலத்தில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு, தங்களுக்கு ஜேர்மனி அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தான்.

சிறுவனின் தந்தை 49 வயதான Shwana தெரிவிக்கையில்,

தமது மனைவியின் தந்தை இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி தங்களது 7 வயது மகளுக்கு விருத்தசேதனம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதாகவும்,எதிர்ப்பு தெரிவித்தால் பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என மிரட்டியதாகவும், அதனாலையே நாட்டைவிட்டு குடும்பத்துடன் வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனிக்கு வந்து சேர்வதற்காக ஒரு கும்பலிடம் அவர்கள் கட்டணமாக 60,000 யூரோ அளித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது அந்த குடும்பத்திற்கு புகலிடக்கோரிக்கையை முன்வைத்து மனு அளிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றமே முறையான முடிவெடுக்க முடியும் என கூறப்படுகிறது.காரணம் இவர்கள் மீது ஆவணங்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இது இவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு வழிவகுக்கும்.

மேலும் ஜேர்மனியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள காரணத்தால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது

Related posts

ஹோண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதி ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கும் கொரோனா தொற்று!

T24 News Desk 4

ஹொங்கொங்கில் மேலும் 52 கொரோனா தொற்றாளர்கள் உறுதி

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹூவாவி நிறுவனத்திற்கு தடை விதித்தது பிரிட்டன்!

T24 News Desk 3

ஹாங்காங்கில் 50 ஜனநாயகவாதிகள் கைது!

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஸ்வீடன் இளவரசர்- இளவரசிக்கு கொரோனா! அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவுக்கு பஸில் ராஜபக்ஸ செய்த துரோகம் – கொதித்தெழுந்த சிங்கள தரப்பு

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more