T24 Tamil Media
உலகம்

சீனா பூரணமான ஆதரவினை தரவில்லை. உலக சுகாதார அமைப்பு.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா, உலக சுகாதார நிறுவனத்துக்கும் இடையே மோதல்கள் உருவானது. 

கொரோனா தொற்று பற்றிய உண்மைத்  தகவல்களை மூடி மறைப்பதற்கு சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. 

இந்த நிலையில் அதிரடியாக கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனத்துடனான தனது உறவை அமெரிக்கா துண்டித்துள்ளது. 

அந்த நிறுவனத்துக்கு வழங்கி வந்த பெருந்தொகையை நிறுத்திக்கொண்டு, அதை தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்போவதாக டிரம்ப் அறிவித்ததார்.

இவ் விடயம்  உலக அரங்கை அதிர வைத்தது.கொரோனா வைரஸ் விவகாரத்தில் இதுவரை சீனாவுக்கு வெளிப்படையாக உலக சுகாதார நிறுவனம் ஆதரவு அளித்தது.

உலக அரங்கில் சீனாவை பாராட்டியும் வந்தது.குறிப்பாக கொரோனா வைரசுக்கு எதிராக சீனா விரைவான பதிலடி கொடுத்தது.கொரோனா வைரசின் மரபணு வரைபடத்தை பகிர்ந்து கொண்டது என்றெல்லாம் உலக சுகாதார நிறுவனம்  பாராட்டி மகிழ்ந்தது.

ஆனால் உண்மை அதுவல்ல என்று நிரூபித்துக்காட்டுகிற வகையில் தற்போது அதிர்ச்சியூட்டும் சில உண்மைத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான சோதனைகள், மருந்துகள், தடுப்பூசிகள் ஆகியவற்றை வடிவமைப்பதற்கு தேவையான விவரங்களை சீனா பகிர்ந்து கொள்ளாமல், பல அரசாங்க ஆய்வகங்கள் முழுமையாக கொரோனா வைரசின் மரபணு வரிசைகளை கண்டறிந்த பின்னர், அதை வெளியிட சீன அதிகாரிகள் அமர்ந்தனர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

இதற்கு காரணம், சீன பொது சுகாதார அமைப்பினுள் தகவல்களை பகிர்ந்து கொள்ள இருந்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள் தான் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கண்டறிந்துள்ளது.

சீன அரசின் உள் ஆவணங்கள், மின்னஞ்சல்கள் மூலம் இதை அச் செய்தி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
சீன ஆய்வுக்கூடம்  ஜனவரி 11-ந் திகதி வெளியிட்ட பின்னர்தான், அரசு சுகாதார அதிகாரிகள் கொரோனா வைரசின் மரபணு வரைபடத்தை வெளியிட்டுள்ளனர்.

ஆனாலும் ,உலக சுகாதார நிறுவனத்துக்கு தேவையான விவரங்கள் மற்றும் தகவல்களை வழங்காமல் மேலும் 2 வாரங்களுக்கு இழுத்தடித்துள்ளனர்.

ஜனவரி மாதத்தில் நடைபெற்ற  உலக சுகாதார நிறுவனத்தின் உள் கூட்டங்களில் செய்யப்பட்ட பதிவுகளிலிருந்து இந்த செய்தி நிறுவனத்துக்கு தெரிய வந்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை வியக்கத்தக்க அளவில் குறைத்திருக்க முடியும். தாங்கள் பெற்றுள்ள பதிவுகள், சீனாவை வெளியரங்கில் பாராட்டிய உலக சுகாதார நிறுவனம், உள்ளுக்குள் கவலைப்பட்டதை காட்டுகின்றன என அந்த செய்தி நிறுவனம் கூறுகிறது.

அதிலும், கொரோனா வைரஸ் தொற்றால் எந்தளவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை மதிப்பிடுவதற்கான விவரங்களைக்கூட சீனா உரிய நேரத்தில் பகிர்ந்து கொள்ளவில்லை என உலக சுகாதார நிறுவனம் கருதியுள்ளது.

இப்போது இந்த தகவல்கள் உலக சுகாதார நிறுவனத்தின் மீதான பிடியை அமெரிக்கா இறுக்கியுள்ள நிலையில்தான் வெளியுலகுக்கு வந்துள்ளன என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

ஆனால் சீன அதிபர் ஜின்பிங், கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை சீனா உலகிற்கும் , உலக வர்த்தக நிறுவனத்திற்கும் எப்போதுமே சரியான நேரத்தில் வழங்கி வந்துள்ளது.

Related posts

ஹோண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதி ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கும் கொரோனா தொற்று!

T24 News Desk 4

ஹொங்கொங்கில் மேலும் 52 கொரோனா தொற்றாளர்கள் உறுதி

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹூவாவி நிறுவனத்திற்கு தடை விதித்தது பிரிட்டன்!

T24 News Desk 3

ஹாங்காங்கில் 50 ஜனநாயகவாதிகள் கைது!

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஸ்வீடன் இளவரசர்- இளவரசிக்கு கொரோனா! அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more