கொரோனா வைரஸ் தொற்றினால் உலகளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 17/04/2020 அன்று 150,000 ஐ தாண்டியுள்ளது.
முதல் மரணம் ஜனவரி 9 ஆம் தேதி மத்திய சீன நகரமான வுஹானில் ஏற்பட்டது. முதல் 50,000 இறப்புகள் பதிவு செய்ய 83 நாட்களும், எண்ணிக்கை 100,000 ஆக உயர இன்னும் எட்டு நாட்களும் ஆனது. 100,000 முதல் 150,000 வரை செல்ல இன்னும் எட்டு நாட்கள் ஆனது.
பல நாடுகளில், உத்தியோகபூர்வ தரவுகளில் மருத்துவமனைகளில் பதிவான மரணங்கள் மட்டுமே உள்ளன, வீடுகளிலோ அல்லது வயோதிப இல்லங்களிலோ ஏற்பட்ட மரணங்கள் அவற்றில் உள்ளடங்கவில்லை. ஆகையால் இறப்பின் எண்ணிக்கை தற்போதைய உத்தியோக பூர்வ எண்ணிக்கையினை விட அதிகமாகவே இருக்கும்.