சீனாவில் உருவெடுத்து உலகையே ஆட்டிப்படைத்து வருகின்றது கொரோனா வைரஸ்.
இந்த வைரஸால் உலகளவில் 62 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மூன்று லட்சத்து 73 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் தொடரும் நிலையில், அங்கு ஒரு லட்சத்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
பிரேசிலில் 5 லட்சத்து 14 ஆயிரம் பேரும், ரஷ்யாவில் 4 லட்சத்து 5 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 2 லட்சத்து 32 ஆயிரம் பேரும், பிரான்ஸில் ஒரு லட்சத்து 88 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.