T24 Tamil Media
உலகம்

கிர்கிஸ்தான் ஜனாதிபதி பதவி விலகினார்.

நாட்டில் அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில் கிர்கிஸ்தானின் ஜனாதிபதி சூரன்பே ஜீன்பெகோவ் (Sooronbai Jeenbekov) இன்று ) பதவி விலகியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

‘நான் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ளவில்லை. கிர்கிஸ்தான் வரலாற்றில் மக்கள் மீது இரத்தக்களரி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதித்த ஒரு ஜனாதிபதியாக நான் கீழே செல்ல விரும்பவில்லை. நான் இராஜினாமா செய்வதற்கான முடிவை எடுத்துள்ளேன்.

இராணுவ மற்றும் பாதுகாப்புப் படையினர் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தி அரச குடியிருப்பைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். இரத்தம் தவிர்க்க முடியாமல் சிந்தப்படும். ஆத்திரமூட்டல்களுக்கு விழக்கூடாது என்று இரு தரப்பினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்’ என கூறினார்.

ஒக்டோபர் 4ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிட்ட 120 இடங்களில் இரண்டு அரசாங்க சார்பு கட்சிகள் 107 இடங்களை வென்றதையடுத்து, இதில் மோசடி இடம்பெற்ற கூறி தலைநகர் பிஷ்கெக்கில் எதிர்ப்பாளர்கள் வீதிகளில் இறங்கி போராடினர்.

இந்த மோதலைத் தொடர்ந்து தேர்தல் இரத்து செய்யப்பட்ட நிலையில் புதிய தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் இராஜினாமா செய்வதாக ஜீன்பெகோவ் முன்பு கூறியிருந்தார். தொடர்ந்தும் அமைதியின்மை தொடர்ந்தது.

இதையடுத்து வீதிகளில் ஏற்பட்ட மோதல்களினால், ஜீன்பெகோவ் வெள்ளிக்கிழமை அவசரகால நிலைமையை அறிவித்தார்.

இதன் காரணமாக ஒருவர் உயிரிழந்ததோடு, குறைந்தது 1,200பேர் காயமடைந்தனர். இதனையடுத்து ஏற்பட்ட தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு மத்தியில் சூரன்பே ஜீன்பெகோவ் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

Related posts

ஹோண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதி ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கும் கொரோனா தொற்று!

T24 News Desk 4

ஹொங்கொங்கில் மேலும் 52 கொரோனா தொற்றாளர்கள் உறுதி

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹூவாவி நிறுவனத்திற்கு தடை விதித்தது பிரிட்டன்!

T24 News Desk 3

ஹாங்காங்கில் 50 ஜனநாயகவாதிகள் கைது!

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஸ்வீடன் இளவரசர்- இளவரசிக்கு கொரோனா! அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவுக்கு பஸில் ராஜபக்ஸ செய்த துரோகம் – கொதித்தெழுந்த சிங்கள தரப்பு

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more