T24 Tamil Media
உலகம்

ஒரே முதியோர் இல்லத்தில் 20 பேர் உயிரிழப்பு!ஊழியர்கள் மூவர் மீது கொலை வழக்கு.

சுவிட்சர்லாந்தில் ஒரே முதியோர் இல்லத்தில் 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதன் ஊழியர்கள் மூன்று பேர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணத்திலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கொரோனா தொற்றுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர்.

கவனக்குறைவால் உயிரிழக்க காரணமாக இருத்தல் மற்றும் சுவிஸ் தொற்று நோய் சட்டத்தை மீறியதற்காக அந்த இல்ல நிர்வாகிகள் மூவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அந்த மூவர், அந்த இல்லத்தின் பொது இயக்குநர், சுகாதார இயக்குநர் மற்றும் இல்ல ஊழியர் ஒருவர் ஆவர்.

நேற்று மாலை அந்த மூவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஒரு முதியவரின் உறவினரின் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை அதிக அளவு கொரோனா மரணங்கள் டிசினோ மாகாணத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவற்றிலும், பாதிக்கும் மேல் முதியோர் இல்லங்களில் நிகழ்ந்த மரணங்கள்.நாட்டின் மக்கள்தொகையில் வெறும் நான்கு சதவிகிதம் பேர் மட்டுமே டிசினோ மாகாணத்தில் வாழும் நிலையில், சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்துள்ள மொத்த கொரோனா மரணங்களில் 17 சதவிகிதம் டிசினோவில்தான் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதி ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கும் கொரோனா தொற்று!

T24 News Desk 4

ஹொங்கொங்கில் மேலும் 52 கொரோனா தொற்றாளர்கள் உறுதி

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹூவாவி நிறுவனத்திற்கு தடை விதித்தது பிரிட்டன்!

T24 News Desk 3

ஹாங்காங்கில் 50 ஜனநாயகவாதிகள் கைது!

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஸ்வீடன் இளவரசர்- இளவரசிக்கு கொரோனா! அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவுக்கு பஸில் ராஜபக்ஸ செய்த துரோகம் – கொதித்தெழுந்த சிங்கள தரப்பு

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more