கொரோனாவால் தற்போது அதிக உயிரிழப்புக்களை சந்தித்து கொண்டிருக்கும் பிரேசில், உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக இருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் கொரோனா வைரஸிற்கு ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.
இதனைத் தொடந்து உலக சுகாதார அமைப்பை பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரா விமர்சித்துள்ளதோடு, அதிலிருந்து விலக இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரேசில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கும் போது,
“உலக சுகாதார அமைப்பு ஒருதலைபட்சமான அரசியல் நிலைப்பாட்டை நிறுத்தி கொள்ளாவிட்டால் பிரேசில் உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக நேரிடும்” என்று தெரிவித்தார்.