ஜனவரி 10 தொடக்கம் 1 வரையான காலப்பகுதியில் இந்த ஆண்டின் முதல் கிரகணமகா சந்திர கிரகணம் தோன்றியது
இந்நிலையில் இரண்டாவது சந்திர கிரகணம் இன்று இடம்பெறவுள்ளதுடன், இம்மாதம் 21 ஆம் திகதி இவ் ஆண்டிற்கான முதலாவது சூரிய கிரகணம் இடம்பெறவுள்ளது.
இதன்படி இன்று சந்திர கிரகணம் இரவு 11:15 மணிக்கு ஆரம்பமாகி நாளை காலை 2.34 மணிவரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிரகணம் ஸ்ட்ரா பெரிமூன் கிரகணம் எனஅழைக்கப்படும் இச் சந்திர கிரகணத்தில் 57 வீதம் நிலவு மறைக்கப்படும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த கிரகணம் மொத்தமாக மூன்று மணி நேரமும் பதினெட்டு நிமிடங்கள் வரையும் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கிரகணத்தை இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள், ஐரோப்பா ஆஸ்திரேலியா, ஆபிரிக்கா, பசுபிக் பிராந்தியம், தென் அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதிகள், அத்திலாந்திக், இந்திய பெருங்கடல், அண்டார்டிக்கா ஆகிய இடங்களில் பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.