இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளதுடன் ஆலைக்கு அருகே வசிக்கும் சுமார் 950 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அத்துடன் இந்த விபத்து மேற்கு ஜாவாவில் உள்ள Balongan எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், நள்ளிரவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆலையில் ஒரு நாளைக்கு 125,000 பீப்பாய் எண்ணெய் சுத்திகரிக்கப்படுவதாகத் தேசிய எரிசக்தி நிறுவனமான Pertamina தெரிவித்தது.
மேலும் எவ்வாறு தீ விபத்துக்குள்ளாகது என்பது இதுவரையில் தெரியவில்லை எனவும் எண்ணெய் வழிந்து தீ பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக Pertamina நிறுவனம் தெரிவித்துள்ளது.