சில முக்கியய திருத்த வேலை காரணமாக நாளை (20) கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தவகையில் நாளை காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதனடிப்படையில் கொழும்பு, தெஹிவல – கல்கிஸ்ஸ, கோட்டே மற்றும் கடுவல ஆகிய மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள் மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், கொட்டிகாவத்த மற்றும் முல்லேரியா ஆகிய பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.