ஈழத்தில் பல தடைகளைக் கடந்து தன்னெழுச்சியான பேரெழுச்சியுடன் இன்று மாலை முடிவடைந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு ஆதரவை வழங்கும் வகையில் சுவிஸ் மண்ணிலிருந்து Bern, Geneva, Zürich ஆகிய மாநிலங்களின் பிரதான வீதிகளினூடாக வாகனப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
இப்பேரணியில் சுவிஸ் அரசின் சுகாதார நடைமுறைகளையும் , சட்ட விதிமுறைகளையும், பொதுப்போக்குவரத்து ஒழுங்குகளையும் நேர்த்தியான முறையில் கடைப்பிடித்து பலர் கலந்து கொண்டனர்.
இன்று ஞாயிற்றுகிழமை பிற்பகல் 14:30 மணிக்கு பேர்ண்: Bern BEA Expo Parkplatz சூரிச்: Albisguetli Parkplatz மற்றும் ஜெனீவா: Centre sportif des vergés parkings ஆகிய இடங்களூடாக இந்தப் பேரணி இடம்பெற்று வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.