அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்கள் கவனம் செலுத்தாதமை தமக்கு ஆச்சரியமளித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
இதனை அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் அமைதியான எதிர்ப்பு போராட்டங்கள் இடம் பெறுவது முக்கியமானதும் உரிமையும் கூட அவற்றை நியாயமாக அக்கறையுடன் அணுக வேண்டும். இப்போராட்டம் தொடர்பில் தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டதை பார்த்தேன்.ஆனால் கொழும்பை தளமாக கொண்ட ஊடகங்கள் ஏன் இதற்கு முக்கியத்துவத்தை வழங்கவில்லை என ஆச்சரியப்பட்டேன்.
உண்மையில் அமைதிவழிப்போராட்டம் என்பது அடிப்படை ஜனநாயக உரிமைகளில் ஒன்றாகும்.இவ்வாறான போராட்டங்களுக்கு செவிசாய்க்கவேண்டும்.அவர்களின் கவலைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.