இலங்கையால் காடழிப்பு குறித்து ஆராயும் நோக்கில் கடற்படை, விமானப்படை வீரர்களை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொலன்னாவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அதிகளவான காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக தற்போதைய அரசாங்கத்தில் உள்ள முக்கிஸ்தர்கள் பலரும் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் அவர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினைப் போன்று சுற்றுசூழலை நேசிக்கும் ஒருவரும் இல்லை எனவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.