
பேஸ்புக் இன்றைய தினம் சுமார் 50 பேர் வரை ஒரே நேரத்தில் ஒன்றிணைந்து பார்த்து பேசக்கூடிய வகையிலான வீடியோ மெஸ்சேன்ஜ்ர் அறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுகமானது தொற்று நோய் காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றும் அலுவலக பணியாளர்கள் மற்றும் பிரிந்திருக்கும் குடும்பத்தினர் நண்பர்களிடையே பலத்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்கின்றது .
படிப்படியாக வரும் வாரங்களில் இந்த கண்டுபிடிப்பு அறிமுகத்திற்கு வரும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது . கொரோனாத்தொற்றுக் காரணமாக கடந்த காலங்களில் அதிகரித்திருக்கும் zoom மற்றும் ஹவுஸ் பார்ட்டி எனும் வீடியோ அழைப்புகளின் வரவேற்பானது இந்த அறிமுகத்தின் மூலம் கணிசமான அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
zoom அழைப்பானது அலுவலகங்கள் மற்றும் உத்தியோகபூர்வமாக பயன்படுத்துவதத்திற்கு பாதுகாப்பானதா என உலகளாவிய ரீதியில் கேள்வி எழுந்துள்ள நிலையில் பேஸ்புக் இன் இந்த அறிவித்தல் மக்களிடையே பெரும் வரவேற்பை அடையும் என பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.