சுமார் ஒரு வாரமாக ஒரு கொள்கலன் கப்பல் சூயஸ் கால்வாயுடனான போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஏறக்குறைய எகிப்தின் சூயஸ் கால்வாயூடான போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது..
400 மீட்டர் நீளம் (1,300 அடி) கொண்ட எவர் கிவன் என்ற குறித்த கப்பல் திங்களன்று அகழ்வாராய்ச்சி மற்றும் இழுபறி படகுகளின் உதவியுடன் சிக்கலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமையினால் சூயஸ் கால்வாயுடனான போக்குவரத்து மீண்டும் ஆரம்பாகியுள்ளது.
பனமேனியக் கொடியிடப்பட்ட சரக்குக் கப்பலான எவர் கிவன் கடந்த செவ்வாய்க்கிழமை எகிப்தின் சூயஸ் கால்வாய் எதிர்பாராத விதமாகத் சிக்குண்டது. 200,000 டொன் எடையுள்ள இக்கப்பலை விடுவிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் முன்னர் தோல்வியடைந்தன.
இதனால் மத்தியதரைக் கடலை செங்கடலுடன் இணைக்கும் கால்வாய் வழியாகச் செல்ல நூற்றுக்கணக்கான (369) கப்பல்கள் காத்திருந்தன. இந் நிலையில் உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 04:40 மணிக்கு மீட்புக் குழுக்களால் கப்பல் சிக்கலிலிருந்து விடுவிக்கப்பட்டது என்று அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்