கடந்த 23 ஆம் திகதி உலகின் பிரதான கடல் வழித்தடமான சுயஸ் கால்வாயில் தரை தட்டியிருந்த எவர்கிவன் சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க ஆரம்பித்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரமாக இக்கப்பல் சிக்கியிருந்தமையினால் சுயஸ் கால்வாயின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டதுடன், சுமார் 300க்கும் அதிகமான கப்பல்கள் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் கால்வாயின் இருமருங்குகளிலும் நங்கூரமிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், மீட்புக்குழுவினரின் முயற்சியினால் சுமார் 6 நாட்களுக்கு பின்னர் கப்பல் தற்போது மிதக்க ஆரம்பித்துள்ளதாகவும், இன்னும் சில மணித்தியாலங்களில் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 அவசர மீட்பு படகுகள் மற்றும் 8 மணல் அகற்றும் இயந்திரங்களைக் கொண்டு சுமார் 156 மணி நேரம் இந்த மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது