T24 Tamil Media
இலங்கை

காலி முகத்திடல் நகர வன பூங்கா பொதுமக்கள் பாவனைக்கு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினதும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் பணிப்புரையின் பேரில் காலி முகத்திடலுக்கு முன்னால் உள்ள பாலதக்ஷ மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள நகர வன பூங்கா கடந்த 30 ஆம் திகதி பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டது.

“சுபீட்சத்தின் நோக்கு“ நிகழ்ச்சித்திட்டத்தை யதார்த்தமாக்கும் வகையில் பொது மக்களின் ஓய்வு, மகிழ்வளிப்பை கருத்திற் கொண்டு நகர்ப்புற வன பூங்கா, நீர் பூங்கா மற்றும் நகர்ப்புற பசுமை உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட ஒரு அழகான நகர்ப்புற சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

கொழும்பு நகரத்தை பசுமை நகரமாக தெற்காசியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் தலைநகரங்களில் ஒன்றாக மாற்றுவதும், நகர்ப்புற மக்களுக்கு சுற்றுச்சூழல் நட்பு நிலப்பரப்பை அனுபவிப்பதற்கு சந்தர்ப்பத்தை அளிப்பதும், பொருளாதார மதிப்பைச் சேர்ப்பதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த பகுதியையும் காலி முகத்திடலையும் இணைத்து, புதிதாக அமைக்கப்பட்ட பாலதக்ஷ மாவத்தையின் ஊடாக உட்கட்டமைப்பு வசதி திட்டத்திற்கான ஒரு முன்மாதிரி திட்டமாக இது உருவாக்கப்பட்டது.

இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நகர வன பூங்கா மூன்று கட்டங்களை கொண்ட திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்காக செலவிடப்பட்ட தொகை 135 மில்லியன் ரூபாவாகும்.

2020 ஜூன் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் பணிகள் 2020 நவம்பர் 15 ஆம் திகதி நிறைவடைந்தன.

திட்ட வடிவமைப்பு, நில வடிவமைப்பு என்பன நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டதுடன், பிரதான திட்ட ஒப்பந்தக்காரராக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் செயற்பட்டது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more