இன்று ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான செயற்குழு கூட்டத்தில் பல பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.
இதன்படி , முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகவும், முன்னாள் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் உதவித் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் , ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக பாலித ரங்கே பண்டாராவும், பொருளாளராக ஏ.எஸ்.எம். மிஸ்பாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.