இன்று மதியம் பெய்த கன மழை காரணமாக திருகோணமலையின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது மைல் கல் பகுதியில் அமைந்துள்ள பண்ணைக்குளம் வாண்பாய்ந்ததால் புல்மோட்டை வீதி ஏகாம்பரம் வீதியில் 3 அடிக்கு மேலாக வெள்ளநீர் பாய்கிறது. இப்பகுதி ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அன்புவளிபுரம் மிகுந்தபுரம், ஆனந்தபுரி, அலஸ்தோட்டம், வரோதயநகர், துவரங்காடு, லவ்லேன், துளசி புரம் பகுதிகளில் பெருமளவிலான வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.