இன்றைய தினம் முகக்கவசம் அணியாத நபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துரித ஆன்டிஜென் பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
புறக்கோட்டை பகுதியை சேர்ந்த இருவருக்கே இவ்வாறு தொற்று ஏற்ப்பட்டுள்ளது.
கொழும்பில் முகக் கவசம் அணியாதிருந்த 300 பேருக்கு ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.