கொழும்பு பகுதி நோக்கி வலப்பனை பகுதியிலிருந்து சென்ற கனரக லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பிட்டவல பகுதியில் குறித்த லொறியானது வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து ரம்புக்பத் ஓயாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை இவ் விபத்து நேர்ந்துள்ளதாக கினிகத்தேனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.லொறி பலத்த சேதத்துக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.