ஜனவரி மாத நடுப்பகுதியில் உத்தியோகபூர்வமாக நாட்டின் விமான நிலையங்களை திறக்க எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.
யுக்ரேன் நாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ள நிலையிலேயே, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் ;
வணிக ரீதியிலான விமான சேவைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அத்துடன், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு மீண்டும் திறக்கப்படுவதன் காரணமாக புதிய கொரோனா கொத்தணி உருவாகும் என எவரும் அச்சப்பட வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.