மேல்மாகாணத்தில் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் உள்ள அரசாங்க பாடசாலைகளின் 11ஆம் தர மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் கல்விப் பொதுத்தராதர சாதாரணப் பரீட்சை இடம்பெறவுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்