பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் கொழும்பு விஜேராம பகுதியில் பொலிஸாரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு விஜேராம பகுதியிலுள்ள பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக உயர்தரப் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் சில மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் உத்தரவை மீறி சட்டவிரோதமாக ஒலிபெருக்கியை பயன்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.