கலகெதர – ரம்புக்கன வீதியில், கலகெதர பேருந்து நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட கோர விபத்தொன்றில் நபரொருவர் பலியாகியுள்ளார்.
மேலும் இவ்விபத்தில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அவசரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரம்புக்கனையை நோக்கி சென்று கொண்டிருந்த ஊர்தியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி உட்பட அவ்விடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டி மற்றும் இரு முச்சக்கர வண்டிகளில் இடித்து பாரிய விபத்து உண்டாக்கியது.