கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜனவரி மாதம் நடுப்பகுதியில் விமான நிலையம் திறக்கப்படுவதுடன் வணிக விமான சேவைகளும் ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
குறித்த, பைலட் திட்டத்திற்கு அமைவாக குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளை அழைப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, ஜனவரி மாதம் நடுப்பகுதியில் விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.