பொலன்னறுவையில் அமைந்துள்ள கல்லேல்ல கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற 5 பேரில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
27 வயதுடைய வென்னப்புவ பகுதியை சேர்ந்த குறித்த தொற்றாளர் சிலாபம், தெமடபிட்டிய பகுதியில் வைத்து குறித்த நபர் உறவினர் ஒருவர் வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.