இலங்கையில் பெற்றோர்களுக்கிடையிலான பிரச்சினைகள் காரணமாக கொல்லப்பட்ட குழந்தைகள் தொடர்பான விபரத்தினை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரன இது தொடர்பாக தெரிவிக்கையில் கடந்த மூன்று வருடங்களில் பெற்றோருக்கு இடையிலான வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் காரணமாக 21 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.