தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்காக நிலத்திலிருந்து நீர்மட்டம் மிகவும் ஆழமாக இருக்கும் இரண்டு இடங்களை ஆராய்ந்து ஒப்படைத்துள்ளதாக நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு மாகாணத்தில் மன்னார் மறிச்சுக்கட்டி எனும் பிரதேசமும் கிழக்கு மாகாணத்தில் எரகம எனும் பிரதேசமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப்பிரதேசங்களில் தரைமட்டத்திலிருந்து 30 ஆடி ஆழத்தில் கூட நீரை கண்டுபிடிக்க முடியாதென கூறியுள்ளார்.
இதேவேளை, தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய நிலத்தடியிலிருந்து நீர் மட்டம் ஆழமாக உள்ள இடத்தைக் கண்டுபிடிக்குமாறு தன்னிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கிணங்க தனது அமைச்சின் புவியியலாளர் ஆய்வை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பித்ததாக அமைச்சர் நானாயக்கார தெரிவித்தார்.