T24 Tamil Media
இலங்கை விளையாட்டு

67 ஓட்டங்களால் இலங்கை அணியை வீழ்த்திய தென்னாபிரிக்கா

நேற்றையதினம் தென்னாபிரிக்கா அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

சீரற்ற காலநிலையால் நேற்றையபோட்டி போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதனைடுத்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 283 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. தென்னாபிரிக்கா அணி சார்ப்பில் மலான் 121 ஓட்டங்களையும் ஹென்ரிக்ஸ் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

பந்துவீச்சில் துஷ்மந்த சமீர மற்றும் சாமிக கருணாரத்ன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து 284 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட இலங்கை அணி களமிறங்கிய நிலையில் மீண்டும் போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனையடுத்து போட்டி 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இலங்கை அணிக்கு D/L முறைப்படி 265 என்ற இலக்கு நடுவர்களால் நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 36.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க அதிகபட்சமாக 77 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் தப்ரைஸ் ஷம்ஸி 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more