அண்மையில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லகிரு குமாரவுக்கு கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே லகிரு திரிமன்னே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி தற்சமயம் பூரண குணமடைந்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் கொரோனா தொற்றுக்கு உள்ளான இரண்டாவது வீரர் இவராவார்.
லகிரு குமார கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக சுரங்க லக்மால் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இதேவேளை ஏனைய வீரர்களுக்கான பி சி ஆர் பரிசோதனை முடிவுகள் இன்றிரவு வெளியாகவுள்ளன.