நடுத்தர வர்க்கத்தினருக்கான வீடமைப்புத் திட்டங்களுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இன்று ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினருக்கு புதிதாக 3000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இவ்வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.