நிதி முறைகேடுகள் காரணமாக ஈ.ஐ.டி மற்றும் சுவர்ணமஹால் நிறுவனத்தின் பணிப்பாளர்களாக செயற்ப்பட்ட ஜீவக எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோர் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபர் தப்புல டிலிவேரா இன்று பிற்பகல் விசேட சிஐடியினருக்கு வழங்கிய ஆலோசனைக்கமைவாகவே இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்ப படுத்துமாறும் உத்தரவு இட்டுள்ளார்.
அதேவேளை சுவர்ணமஹால் நிதி நிறுவனம் மற்றும் ETI நிதி நிறுவனம் என்பனவற்றின் வர்த்தக நடவடிக்கைகள் இன்று (13) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.