கொரோனா தொற்றால் இறப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி காெழும்பில் ஜனாதிபதி செயலகம் முன்னால் இன்று (28) தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது இது தொடர்பான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
முஸ்லிம்கள் உடல் தகனத்தை எதிர்ப்பு போராட்டம் செய்யும் நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.